19/05/2012

உணவும் தமிழ்... உணர்வும் தமிழ்!

உணவும் தமிழ்... உணர்வும் தமிழ்!



எம் இனிய மணமக்களே!

''எம் தீவிரப் பற்றுதலுக்கும்... எம் தீராத அன்புக்கும்... உரிய 'நேயமுறு நெஞ்சங்களுக்கு’...

யாம் மண் கீறி விளையாடிய நிலத்தில், தோட்டத்து மர நிழலில், தென்னை இளங்கீற்றில் பந்தலிட்டு, உங்கள் வருகைக்காகவும் வாழ்த்துக்காகவும் காத்திருக்கிறேன்...''- இப்படி ஒரு வேண்டுகோளோடு வந்த திருமண அழைப்பிதழ் என் கவனம் ஈர்த்தது. கவிஞரும் 'மழை மண் மரம் மானுடம்’ அமைப்பின் நிறுவனருமான ரமேசு கருப்பையாவின் திருமண நிகழ்வுதான் அது!


கடலூர் மாவட்ட எல்லையில் உள்ள தொழுதூரில் மே 6 அன்று, தமிழ் முறைப்படி முற்றிலும் வித்தியாசமாக நடந்தது ரமேசு கருப்பையா- செங்கொடியின் திருமணம்.

மணமகன் ரமேசு கருப்பையாவின் வீட்டுக்கு அருகில் இருக்கும் தோட்டத்தின் பெயரே 'தமிழ்க்காடு!’ மா, இலுப்பை, தென்னை மற்றும் வாழைகள் சூழ்ந்த அந்தத் தமிழ்க் காட்டுக்குள் இருக்கும் வெற்றிடத்தில் மிகப் பெரிய பந்தல் போடப்பட்டு இருந்தது. மாவிலைத் தோரணங்களாலும் தென்னங்கீற்றுகளாலும் பந்தலை அழகாக அலங்கரித்து இருந்தனர். மூவேந்தர்களின் கொடிகள் பறக்கவிடப்பட்டு இருந்தன. அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. காலைச் சிற்றுண்டியாகத் தேனும் திணையும் கலந்த மாவு உருண்டையும், முக்கனிகளான மா, பலா, வாழையும் வரகு அரிசியில் செய்த பொங்கல், இட்லியுமாகத் தமிழ் உணவு மணத்தது. பதநீர், இளநீர், நுங்கு, மூலிகைக் குளிர் நீர், நீராகாரம், கேப்பைக்கூழ், கம்மங் கூழ் என எல்லாமும் இயற்கைக் குளிர்பானங்கள்தான்.

''எனக்குச் சின்ன வயசுல இருந்தே பெரியாரின் கொள்கைகள் மீது பிடிப்பு ஏற்படக் காரணம் என்னுடைய பெற்றோர்தான். என் அப்பா கருப்பையா மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். என் அம்மா செல்லத்தை அந்தக் காலத்திலேயே சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டவர். அவர்களுடைய திருமணத்தைப் பெரியார் பெருந்தொண்டர் தோழர் வே.ஆனைமுத்து 42 ஆண்டுகளுக்கு முன் தலைமை தாங்கி நடத்திவைத்தார். அரிய நிகழ்வாக என் திருமணத்தையும் இப்போது அவர் நடத்திவைத்து இருக்கிறார். தென்மொழி பத்திரிகையின் ஆசிரியரும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் துணைவியாருமான தாமரை பெருஞ்சித்திரனார் தன் குடும்பம் சூழ முன்னிலை வகித்து எங்களுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.

திருமண விழாவில் 'நெகிழி’ எனப்படும் பாலித்தீன் பைகளைப் பயன்படுத்தாமல் முற்றிலும் துணிப் பைகளைப் பயன்படுத்துவது என முடிவெடுத்து நானும் நண்பர்களும் களமிறங்கினோம். சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு தராத காகிதங்களைக் கொண்டு பத்திரிகைகள் மிகக் குறைந்த செலவில் தயார் செய்யப்பட்டன. பேனர் எனப்படும் பதாகைகள் வடிவமைப்பில்கூட நீர் வண்ணத்தையே பயன்படுத்தினோம். அந்த நீர் வண்ணமும் இயற்கை சாயத்தால் தயாரிக்கப்பட்டது. எங்கள் தோப்பில் விளைந்த இளநீரையே திருமணத்துக்கு வரும் விருந்தினர்களுக்கு வழங்கினோம். உணவிலும் தமிழர்களின் காய்கறிகளையே பயன்படுத்தினோம்.


திருக்குறள் விளக்கவுரை உள்ளிட்ட தமிழ் நூல்களை யும் சூழலியல் விழிப்பு உணர்வு சார்ந்த புத்தகங்களையும் என் நண்பர்கள் விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் வழங்கி எல்லோரையும் குளிர்வித்தனர்'' என்றார் ரமேசு கருப்பையா உற்சாகமாக.

மணப்பெண் செங்கொடி தனித் தமிழில் பேசி விழாவுக்கு வந்திருந்த எல்லோரையும் ஆச்சர்யப்படவைத்தார். ''தமிழ்நாட்டில் தூய தமிழில் பிழையின்றிப் பேசுவதைக்கூட சிலர் கேலி பேசுவது வருத்தம்தான். என்னை நினைத்து அல்ல; தமிழனின் நிலையை நினைத்து. ஆனால், என் தந்தை என்னை இளம்பிராயத்தில் இருந்தே தமிழ் ஆர்வத்தை எனக்குள் விதைத்து கூச்சமின்றிப் பேசப் பழக்கிவிட்டார்!'' என்று புன்முறுவல் பூத்தார் செங்கொடி.

பொருத்தமான தம்பதிதான். வாழ்த்துகள் மணமக்களே!

Nanri...AV

சே குவேரா

நாங்கள் தீவிரவாதிகளா, அயோக்கியர்களா என்பதைக் குறித்து பரீசிலனை செய்யும் அதிகாரம் அமெரிக்காவுக்கு இல்லை.




எல்லாக் காலங்களிலும் மக்களுக்காக பேசுபவர்களையும் அவர்களுக்காக போராடுபவர்களளையும் வல்லரசு நாடுகள் தீவிரவாதிகள் என்றால் அவரவர் நாட்டு சுதந்திரத்திற்காக போராடியவர்களை மட்டும் தியாகிகள் என்றார்களே ஏன்?



- சே குவேரா

19/06/2010

பாவலர் சு.வேல்முருகன் - வாழ்க்கைக் குறிப்பு

புதுவை மாநிலம் தவளக்குப்பத்தில் 1946-இல் பிறந்தவர். பெற்றோர் அரங்க.சுப்புராயர்-செங்கேணி. தந்தையார் அன்றைய பிரஞ்சு ஆட்சியின்கீழ் இருந்த பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இளம்பருவத்திலே ஏழைமாணவர்களின் நலன் கருதி தவளக்குப்பம் இளங்கோ மன்றத்தின் சார்பில் நடைபெற்ற இரவுப்பள்ளியில் ஏழைமாணவர்களுக்குக் கல்விகற்பித்தவர்.  

B.A.இளங்கலை (வரலாறு), M.A முதுகலை (தமிழ், ஆங்கிலம்), M.Ed முதுகலை கல்வியல்,  M.Phil., பிரவீன்(இந்தி) என பட்டங்கள் பல பெற்றவர். இவை எல்லாவற்றையும் விட புதுவைக்குப் புகழ்சேர்த்த பெரும்புலவர் பேரா.சுந்தரசண்முகனார் தொடங்கிய திருவள்ளுவர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் யாப்பதிகாரம் பயின்று 1967-இல் பெற்ற "பாவலர்" பட்டத்தையே பெரும்பேறாக கருதுபவர். தன் குருவாகிய அவர் வழங்கிய "சொல்லாய்வுச்செல்வர்" பட்டத்தை நன்றியுடன் நினைவுகூர்கிறவர்.

15/09/2009

கலைமாமணி சு.வேல்முருகன் எழுதிய நூல்கள்

நூல்கள் கிடைக்குமிடம் - கம்பன் பதிப்பகம், புதுச்சேரி-4. (0413) 2359587, kambanmani@live.com

 1. அன்னை இந்திரா ஒரு வெள்ளைப்புறா - முத்துப்பதிப்பகம், விழுப்புரம் (1985)
அன்னை இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நூல் இது. பெற்றோர்-கல்வி-இளமைப்பருவம்-அரசியல் தலைவர் தொடர்பு என இந்திரா காந்தியின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டு வரையப்பட்ட வரலாற்று நூல்.


                                                                                                                                                                 2. வாணிதாசன் பாடல் திறனாய்வு - முத்துப்பதிப்பகம்-விழுப்புரம் (1985)

புதுச்சேரியில் வாழ்ந்து திராவிட இயக்க கவிஞராகத் திகழ்ந்து புகழ்பெற்றவர் கவிஞரேறு வாணிதாசன் அவரைப்பற்றி வரையப்பட்ட முதல் ஆய்வு நூலாகும். உவமைப்பாவலர் - இயற்கைப் பாவலர் - பகுத்தறிவுக் கொள்கை - பொதுவுடைமைக் கொள்கை - தனித்தமிழ்ப்பற்று - சிற்றூர்ப்புறங்களின் மீது ஈடுபாடு ஆகிய தலைப்புகளில் திறனாய்வுக் கட்டுரைகள் கொண்டது. இந்நூல் சிறந்த திறனாய்வு நூல் எனத் தமிழக அரசால் பரிசளிக்கப்பட்டது. (1985)



                                                                                                                                                                                    3. கம்பனில் அறிவு - கம்பன் பதிப்பகம், புதுவை.
கம்பராமாயணப் பாடல்களில் வரும் அறிவு எனும் சொல்லை ஆராயும் நூலாகும். இது ஒரு சொல்லாய்வு அடிப்படையில் எழுதப்பட்டது. கம்பன் அறிவு எனும் சொல்லைக் கையாண்ட முறை, அதனால் பெறப்படும் பொருள், திருக்குறள் காட்டும் அறிவுடன் தொடர்பு, அறிவின் பல்வேறு வகைப்பாடு ஆகியவற்றை ஆய்வுநோக்கில் விளக்கும் நூல்.







                                                                                                                                                                 4.  கம்பன் பாடிய அறம் - கம்பன் பதிப்பகம், புதுவை.
கம்பனின் அறக்கோட்பாடுகளை அலசி ஆராயும் நூல். அறம் என்ற சொல்லாட்சி கம்பன் காவியத்தில் எங்கெல்லாம் எந்தெந்தப் பொருளில் கையாளப்பட்டுள்ளது என்பதைத் தெளிவாக விளக்கிடும் ஆய்வு நூலாகும். அறம் உணர்த்தும் கம்பனின் பாத்திரங்கள் எங்கெல்லாம் அறம் பிறழ்ந்து நடக்கின்றனவோ அவற்றையெல்லாம் நுண்ணிதின் ஆராய்ச்சியுடன் விளக்குகிறது.







                                                                                                                                                                                                                5. வாணிதாசன் பாடல்களில் உருக்காட்சி - கம்பன் பதிப்பகம், புதுவை.
ஆங்கிலத்தில் imagery என்பதைத்தான் உருக்காட்சி எனக் குறிக்கின்றார் நூலாசிரியர். உருக்காட்சி என்றால் என்ன? உருக்காட்சி தோன்ற வாணிதாசன் பாடிய பாடல்கள் யாவை என்பதை மேலைநாட்டார் நோக்கில் ஆராய்ந்திடும் ஆய்வு நூலாகும்.









                                                                                                                                                                                                                      6. கோப்பெருஞ்சிங்கன் கனவு - வரலாற்றுக் கதைநூல்.
சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட கோப்பெருஞ்சிங்கக் காடவராயனின் (கி.பி.1243-1279) வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட வரலாற்றுக் கதையாகும். சேந்தமங்கலம் - திருவக்கரை - வில்வநல்லூர் ஆகிய ஊர்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டது. திருவக்கரையை ஒய்சாள மன்னனின் படைத்தளபதிகள் தீக்கிரையாக்கிய செய்தி பேசப்படுகிறது.






                                                                                                                                                                                                                                                                          7. ஆராய்ச்சி - ஒரு சொல்லாய்வு.
சொல்லாய்வு அடிப்படையில் அமைக்கப்பட்ட ஆய்வு நூலிது. ஆர் + ஆய்தல்= ஆராய்தல். ஆர் + ஆய்ச்சி = ஆராய்ச்சி என வேர்ச்சொல் மூலத்தைக் கண்டறிந்து அதற்கான சான்றுகளைத் தரும் நூல். ஆராய்ச்சி சொல்லாய்வின் அடிப்படையில் ஆராய்தல் என்றால் என்ன? எப்படி ஆராயவேண்டும் என்பன போன்ற பல வினாக்களுக்கு விடை காணும் நூல்.







                                                                                                                                                                                                                                                                             8. மாறுபட்ட மல்லிகை - கதை
கணவனால் கைவிடப்பட்ட பெண் - அவன் கொடுமை மீண்டும் தொடர்கிறபோது வெகுண்டு எழுந்து திருத்த முற்படுகிறாள். பயன் விளையாதபோது சரியான தண்டனையைக் கொடுத்து விடுகிறாள். பாரதிகண்ட புதுமைப் பெண்ணாகப் புரட்சிப் பெண்ணாக மாறிவிடுகிறாள். கதையைப் படித்தால் பாத்திரத்தைப் புரிந்துகொள்ளலாம்.







                                                                                                                                                                                                                                                                     9. புதுச்சேரி மண்ணில் பிரான்சுவா மார்த்தேன் - வரலாற்றுக் கதை நூல்
17-ஆம் நூற்றாண்டில் புதுச்சேரிக்கு வந்த பிரான்சுவா மர்த்தேன் ஆளுநர் பதவி வரை உயர்ந்து - வாணிகம் செய்யவும் - புதிய காலனியை உருவாக்கவும் எடுத்துக்கொண்ட முயற்சிகள் இந்நூலில் பேசப்படுகின்றன. டச்சுக்காரர்களாலும் - ஆங்கிலேயர்களாலும் ஏற்பட்ட போர்கள் - சிக்கல்கள் அவற்றிலிருந்து புதுச்சேரியைக் காப்பாற்றிய முறைகள் - அவன் மக்களுக்குச் செய்த நற்பணிகள் - அக்காலத்திய ஆட்சிமுறைகள் நூலில் கதையாக வருகின்றன.

இந்நூல் புதுவை அரசின் கம்பன் புகழ்ப்பரிசு பெற்ற நூலாகும். (2002)




                                                                                                                                                                                                                                                                                            10. வாணிதாசன் கவிதைக்கலை
கவிஞரேறு வாணிதாசன் எழுதிய படைப்புகளை ஒட்டுமொத்தமாக ஆராய்ந்து அவரின் கவிதை எழுதும் ஆற்றலை - கலையாக நூலில் தந்துள்ளார். வாணிதாசன் கவிதைக்கலை தனித்தன்மை வாய்ந்தது என்பதைப் பாடல்வழி நின்று ஆராய்ந்துள்ளார். வாணிதாசனை ஆராய்வார்க்கு இந்நூல் ஒரு வழிகாட்டி. 212 பக்கங்களைக் கொண்டது. கம்பன் பதிப்பக வெளியீடு.








                                                                                                                                                                                                                                                                                                               11. திருவக்கரை வரலாறு
திண்டிவனம் வட்டம் - வானூர் ஒன்றியத்தில் புகழ் பெற்றிருக்கும் வக்கர காளியம்மன் வீற்றிருக்கும் ஊர்தான் திருவக்கரை. அவ்வூரின் பழைய வரலாறு - மன்னர் வரலாறு - கோயில் வரலாறு - கல்வெட்டுகள் கூறும் செய்திகள் - திருவக்கரையைச் சுற்றியுள்ள ஊர்கள், கல்மரப்பூங்காவின் வரலாறு, அகழாய்வுப்பணிகள், அங்கு நிகழ்ந்த படையெடுப்பு ஆகியவற்றை வண்ணப்படங்களுடன் விளக்கும் நூல்-230. பக்கங்களைக் கொண்டது. கம்பன் பதிப்பகப் படையல் இது.


தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசினை வென்றது.




                                                                                                                                                                                                                                                                                                                            12. பகல்அல்லி
கல்வராயன் மலைவாழ் மக்களின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டும் நூலிது. வாழ்க்கையில் தடம்மாறி போன பெண் ஒருத்தி கணவனுக்கு இரண்டகம் செய்துவிட்டுப் பிள்ளைகளை வளர்ப்பதும், அதனால் படும் துன்பங்களையும் நூல் விளக்குகிறது. தமிழ்ப் புலவரால் அக்குடும்பம் நன்னெறிக்குட்படுத்துவதும் பிள்ளையால் குடும்பம் புகழ்பெறுவதுதான் கதை.







                                                                                                                                                                                                                                                                                                                                                13. வாகூர் நாட்டு வண்டார் குழலி

புதுவை மாநிலத்தில் புகழ்பெற்ற பாகூர் என்பதுதான் அக்காலத்தில் வாகூர் என அழைக்கப்பட்டது. பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மன் காலத்தில் அங்கு வடமொழிக் கல்லூரி செயல்பட்டது. அவனுடைய செப்புப்பட்டயத்தை ஒட்டி எழுதப்பட்ட வரலாற்றுக் கதைநூல் நம்மை அந்தக் காலச்சூழலுக்கு அழைத்துச் சென்று தமிழ்-வடமொழிக்கான தொடர்பினை விளக்குகிறது. நல்ல தமிழ் இலக்கியநடையில் எழுதப்பட்ட விறுவிறுப்பான கதையோட்டம் கொண்ட நூலாகும்.







                                                                                                                                                                                                                                                                                                                                                                   14. செவ்வியல் மொழி தமிழ்
இந்நூலில் செவ்வியல்மொழிப் போராட்ட வரலாறு- செவ்வியல் - செம்மொழி-சொல்லாய்வு - தமிழ் - திராவிடம் - சங்ககாலம் - மேனாட்டார் தமிழ் கற்ற வரலாறு - கிரேக்க -இலத்தீன் மொழித்தொடர்பு - வடமொழிக்கும் தமிழுக்குமுள்ள தொடர்பு ஆகியவை வரலாற்று அடிப்படையில் எழுதப்பட்ட சான்றுகள் நிறைய உள்ளன. செம்மொழி மாநாடு நடத்தும் இவ்வேளையில் படிக்க வேண்டிய பயனுள்ள நூல்.







                                                                                                                                                                                                                                                                                                                                                  15. புதுவைச்சிவமும் மறுமலர்ச்சியும்
புதுவைத் திராவிட இயக்கத் தலைவர்களில் குறிப்பிடத்தக்க ச.சிவப்பிரகாசம் எனும் புதுவைச் சிவம்-பெரியாரின் கொள்கையில் ஈடுபட்டு இறுதிவரை கொள்கைக்காகவே வாழ்ந்தவர். பாவேந்தரோடு தொடர்பு கொண்டு நூலாக்கப்பணிகள் செய்தவர். திராவிட இயக்கப் பாடல்களை நூலாக வடித்தார். அவர்தம் இலக்கியப்பணி. இயக்கப்பணி குறித்த திறனாய்வினை இந்நூலில் காணலாம்.

14/09/2009

புதுச்சேரி நகரம்:- பழைய அரிய நிழற்படங்கள்!

புதுச்சேரியின் பழைய நிழற்படங்கள் இதோ....
(அன்பர்கள் தங்கள் விருப்பம்போல் பதிவிரக்கம் செய்துகொள்ளலாம்.)
 
பழங்கால புதுச்சேரி நகர அமைப்பு
   
நகர வரைப்படம்
 
 
புதுவை துறைமுகம்


பழங்கால புதுச்சேரி

புதுவை மாதாகோயில்
பழங்கால புதுச்சேரி
மேரி ஹால் (La mairie) (இன்று புதுவை நகராட்சி மாளிகை)
நீதிமன்றம்

  பழைய கலங்கரைவிளக்கம்


  ஆளுனர் மாளிகை
 
தின்பண்டம் விற்பவர் (அடடா!.. எவ்வளவு மகிழ்ச்சி முகத்தில்..)
 
மிட்டாய் வியாபாரி, சிறுமி

மரச்சிற்பக் கலைஞர்

 
மண்பாண்டக் கலைஞர்
 
பழங்கால புதுச்சேரி


புதுச்சேரி – சுற்றுலாத்தலங்கள்

சிறந்த சுற்றுலாத்தலங்கள் பல புதுவை நகரில் உள்ளன. அவற்றில் முதன்மையானவை

1. கடற்கரைச் சாலை (அ) குபேர் சாலை

அழகிய இக்கடற்கரை சுமார் 1.5 கி.மீ. தொலைவு கொண்டது. 19-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கலங்கரைவிளக்கமும், அதன் எதிரேயுள்ள காந்தி சிலை வளாகமும் காணத்தக்கவை. இவ்வளாகத்தைச் சுற்றிலும் உள்ள எட்டு தூண்களும் செஞ்சியிலிருந்து கொண்டுவரப்பட்டவை.

La mairie என்றழைக்கப்படும் புதுவை நகராட்சி அலுவலகக் கட்டடம் பிரஞ்சுக் கட்டடக் கலையைப் பறைசாற்றியபடி நிற்கிறது. அதனருகில் முதல்உலகப்போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவுத்தூண் (Monument aux morts de France) மிகக் கம்பீரமாக எழுந்து நிற்கிறது.